சென்னை, மே 22- சென்னையில் இயங்கிவரும் நற் சிந்தனை வட்டம் மற்றும் யோகா அறிவியல் சிகிச்சை மையம், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்தும் யோகா வழி ஆரோக்கிய விழிப்புணர்வு குறித்த சர்வதேச ஆன்லைன் யோகா போட்டிகளை நடத்துகிறது. இதுகுறித்து நற்சிந்தனை வட்டத்தை சேர்ந்த ஆர் பாலன் கூறுகையில், யோகா தெரிந்த அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். இதில் ஆண் ,பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது அடிப்படையில் பல பிரிவுகள் பிரிக்கப்பட்டு உள்ளது. உங்கள் வீட்டிலேயே யோகா ஆசனங்கள் தெரிந்த அனைவரும், ஒரு ஐந்து ஆசனங்களுக்கு குறையாமல் 3 நிமிடங்கள் மிகாமல் வீடியோ எடுத்து கீழ்கண்ட வாட்ஸ் அப்பில் வருகிற 28-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
இதில் கலந்து கொள்பவர்கள் தங்களது மூன்று நிமிட வீடியோவில் குறைந்தபட்சம் 5 ஆசனங்களை செய்து வருகிற 28-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முடிவுகள் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும். முடிவுகள் தமிழ் பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாகவும் தெரியப்ப டுத்தப்படும். உங்களது தொலைபேசி வாட்ஸ்அப்பில் இருந்தால் அதற்கு அனுப்பப்படும். இந்தப் போட்டிகளை வீடியோ எடுத்து அனுப்ப வேண்டிய எண் 9444203498 ஆகும்.